மக்களவை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி ஜெயிக்கக் கூடாது என்பதற்காக திமுகவும், அதிமுகவும் சேர்ந்து கள்ளக்கூட்டணி போட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கருத்துக்கணிப்பில், திமுக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைப்பதாக கூறப்படுகிறதே என்னும் கேள்விக்கு மக்கள் கருத்து என்ன என்பது, ஜூன்4ல் தெரியவரும்.
அதற்குள் ஏன் தேவையில்லாத விவாதம் என்று பதில் கேள்வி எழுப்பினார். திமுகவும், அதிமுகவும் கள்ளக்கூட்டணி போட்டிருப்பதாகவும் அப்போது அவர் கூறினர்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:-
அதிமுகவுக்கு தலைமை யார்? புரட்சித்தலைவரும், அம்மாவும் இருந்தபோது அது உண்மையான தலைமை.
இப்போது கட்சியை அபகரித்து வைத்திருப்பவர் தலைவராக முடியுமா?
அவராகத் தன்னை தலைவர் என்று கூறிக் கொண்டால் தலைவராக முடியாது.
இதையும் படிங்க: பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்
அதிமுக இன்று பலவீனமாக மாறி இருக்கிறது. பழனிச்சாமி தலைமையில் ஒரு ஐந்தாறு பேரின் சுயநலத்தால், பதவி வெறியால், துரோக புத்தியால் அதிமுக இன்று வியாபார நிறுவனம் போல பயன்படுத்தப்படுகிறது.
பழனிச்சாமியின் நான்கரை ஆண்டு ஆட்சிமீதான கோபத்தில்தான், திமுக திருந்தி இருக்கும் என்று மக்கள் ஆட்சியைக் கொடுத்தார்கள்.
ஆனால், கொடுத்த வாக்குறுதிகளில், 90 சதவீதத்துக்கும் மேல் திமுக நிறைவேற்றவில்லை. அதனால மக்கள் கோபமாக இருக்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் போதை மருந்து வியாபாரம், ஆளும்கட்சி நிர்வாகிகள் துணையோடு நடைபெறுவது எல்லோரும் வருத்தப்படக்கூடிய விஷயம்.
வருங்கால இளைஞர் சமுதாயமே பாதிக்கப்படும் அளவில் இந்த போதைப் பொருள் வியாபாரத்தை திமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
போதையில் காவல்துறையினரை தாக்குவது தொடங்கி எத்தனையோ விசித்திரமான சம்பவங்கள் எல்லாம் இந்த ஆட்சியில் நடக்கிறது.
இப்படி திமுக மீதுள்ள வெறுப்புணர்வை மக்கள் பிரதிபலித்துவிடுவார்கள் என்பதால் தான், திமுகவும், பழனிச்சாமியும் தேர்தலில் கள்ளக்கூட்டணி வைத்துக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ”சொத்துக்காக தந்தையை இரக்கமின்றி தாக்கிய மகன்..” டி.ஜி.பி. போட்ட அதிரடி உத்தரவு!
பா.ஜ.க கூட்டணி ஜெயிக்கக் கூடாது என்று ஓட்டைப் பிரிப்பதற்காக, இரட்டை இலை என்னும் புரட்சித்தலைவர் கண்ட சின்னத்தை திமுகவுக்கு உதவி செய்வதற்காகப் பயன்படுத்தி இருக்கிறார்.
அது இன்று தோல்வியில் முடிந்திருக்கிறது.
பழனிச்சாமி மீது கொடநாடு கொலை வழக்கு உள்பட பல பிரச்சனைகள் இருக்கிறது.
முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கிறது. இதனால் தங்களை கைது செய்துவிடாதீர்கள் என்று திமுகவிடம் சரணாகதி ஆகி, இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள்.
துரோகத்துக்கு எதிராக தொடங்கப்பட்ட அதிமுக இயக்கம் இன்று துரோகம் செய்வதற்காகவே ஒரு கும்பலால் பயன்படுத்தப்படுகிறது.
அதனால்தான் தேனிக்கு பிரசாரத்துக்கு வந்த அண்ணாமலை, இந்த இயக்கம் தேர்தல் முடிவுக்குப் பின்னர் டிடிவி தினகரன் மூலம் உண்மையான தொண்டர்களிடம் சேரும் என்று சொன்னார்.
பி.ஜே.பி.க்கு அதிமுக அழிந்துபோக வேண்டும் என்னும் எண்ணம் கிடையாது…
பா.ஜ.க கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம்… பா.ஜ.கவுக்கான வாக்கு சதவீதமும் அதிகமாக இருக்கும்.
அதிமுக 40 தொகுதிகளிலும் 3வது இடத்துக்கு வரும். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.