தமிழகத்தில் சூரியனின் வெப்பம் சுட்டெரிக்கும் நிலையில் இதன் உச்சகட்டமாக வரும் 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.
25 நாட்கள் அக்னி நட்சத்திரம் இருக்கும் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திர மாதம் 21ல் தொடங்கி , வைகாசி 15ல் முடிவடையும்.
இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் வருகிற 4ஆம் தேதி சனிக்கிழமை தொடங்குவதாக பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமான இந்த கத்தரி வெயில் 25 நாட்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து 110 டிகிரிக்கும் மேலாக வெப்ப அலை வீசுகிறது.
கத்தரி வெயிலும் கைகோர்த்துக் கொண்டால், இன்னமும் வெயில் உச்சபட்சமாகும்.
கத்தரி வெயில் நேரடியாக தலையில் படும்போது மூளைநரம்புகள், பார்வை நரம்புகள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் பித்தம் அதிகரித்த நிலையில் ஒற்றைத் தலைவலி, பார்வைக் கோளாறுகள் ஏற்படும்.
கோடைகால நோய்களை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த கத்தரி வெயிலின் போது புதுவீடு புகுதல், செடிகொடிகளை வெட்டுதல், மரம் வெட்டுதல், வீடு பராமரிப்பு பணிகளைத் தொடங்குதல் செய்ய வேண்டாம் என்று பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெப்ப அலை : இன்று 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!!
அதே நேரம் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற சுப காரியங்களை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் சூரிய பகவானை வழிபாடு செய்து நீர்தானம், அன்னதானம், காலனி தானம் கொடுப்பது நன்மை என்கிறது பஞ்சாங்கங்கள்.