டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது.இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதனையடுத்து 24 மாநிலங்களைச் சேர்ந்த 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.இந்த நிலையில்,மத்திய அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் மீண்டும் அமித் ஷாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறுகுறு நடுத்தர தொழில் துறை ஷோபாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
ராஜ்நாத் சிங் மீண்டும் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமனம்.
ஜெய்சங்கருக்கு மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் .
ரயில்வே துறை அஸ்வினி வைஷ்ணவிற்கு அமைச்சராக நியமனம்.
நிதின் கட்கரிக்கு மீண்டும் தரைவழி போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அஜய் தம்தா மற்றும் ஹர்ஸ் மல்கோத்ரா ஆகியோர் போக்குவரத்து இணை அமைச்சர்களாக நியமனம்.
சிவ்ராஜ் சிங் சவுஹானுக்கு வேளாண் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகள் ஒதுக்கீடு