நெய்வேலியில் ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க விட மாட்டேன் என்று கோஷம் போட்டுக் கொண்டு வருபவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார்கள். திருவாரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனின் சகோதரர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் திருவாரூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகனின் சகோதரரும் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவருமான திருமாவளவன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது,
நெய்வேலி நிர்வாகத்திற்குச் சிம்ம சொப்பனமாகவும் நெய்வேலி மக்களுக்காகப் போராடுகின்ற இயக்கம் என்று சொன்னால் அது தமிழக வாழ்வுரிமை கட்சி தான். மத்தியஅரசுக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்களைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி செய்திருக்கிறது.
யாராரோ வருகிறார்கள் யாராரோ போராடுகிறார்கள் என்று சொன்னால் இவர்கள் எல்லாம் மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலே அங்கம் வகித்தவர்கள். மத்தியில் நிலக்கரித் துறையினுடைய சுரங்கத் துறை அமைச்சராகக் கோலோச்சியவர்கள்.
அந்த நெய்வேலி பகுதியில் இருக்கக்கூடிய பாராளுமன்றத்தினுடைய உறுப்பினராகப் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் தான் தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகித்தார்கள் என்று தெரவித்தார்.
அவர்கள் அந்த காலகட்டத்தில் ஒரு துரும்பைக் கூட அந்த மக்களுக்காக வீடு நிலம் இழந்தவர்களுக்காக அந்த பகுதியினுடைய வேலை வாய்ப்பை பெற முடியாத 13000 ஒப்பந்த தொழிலாளர்கள் இருந்த காலகட்டங்களில் இவர்கள் எந்த ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அன்புமணியின் கடந்த கால வரலாறு என்று தெரவித்தார்.
மத்தியில் சுகாதாரத்துறை அமைச்சர் சுரங்கத் துறை அமைச்சர் இணை அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளில் பாமகவினர் இருந்த போதும் இதுகுறித்து இவர்கள் வாய் திறக்காதவர்கள் தான்.
இன்று நெய்வேலிக்கு எதிராக ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது என கோஷம் போட்டுக் கொண்டு வருபவர்கள். இவருடைய கடந்த கால வரலாறு கடந்த கால நிலைப்பாடு அப்பகுதியில் வாழக்கூடிய மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
அதனால்தான் கடலூர் நெய்வேலியைச் சுற்றிச் சுற்றி வாரத்திற்கு ஒரு போராட்டத்தை அன்புமணி அறிவித்த போதிலும் மக்கள் செல்வாக்கு இல்லாமல் மக்களால் புறக்கணிக்கப்பட்ட போராட்டங்கள். இவர்களின் கடந்த கால வரலாறு இவர்கள் நெய்வேலி நிர்வாகத்திற்கு எவ்வளவு சாதகமாக நடந்து கொண்டார்கள் என்பதுதான் அங்கு மக்களுடைய நிலைப்பாடு.
டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பணிகள் நடந்து கொண்டிருப்பதால் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொண்டு சேர்க்கக்கூடிய காலத்தில் இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதத்தைத் தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.