ஆள் கடத்தல் வணிகம் தொடர்பாக 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனை நடந்து வருகிறது.
அதன்படி, திரிபுரா, அசாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஹரியானா, புதுவை, ராஜஸ்தான், ஜம்மு – காஷ்மீர் ஆகிய 10 மாநிலங்களில் சோதனை நடந்து வருகிறது.
சென்னையில் நடைபெற்று வரும் என்.ஐ.ஏ சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படப்பையில் நடைபெற்ற சோதனையில் வங்கதேச நாட்டை சேர்ந்த சபாபுதீன் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் போலி ஆதார் அட்டை தயாரித்து இந்தியாவில் ஊடுருவி பணி செய்து வந்தது கண்டுபிடிப்பு.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்று போலியாக ஆதார் அட்டை தயாரித்து வைத்திருந்ததும் கண்டுபிடிப்பு.
மேலும், மறைமலைநகர் பகுதியில், ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னா, மற்றும் அவருடன் தங்கி இருந்த மியான் என்பவரும் கைது. போலி ஆதார் அட்டை தயாரித்து, அதன் மூலம் பணியாற்றி வந்தது கண்டுபிடிப்பு.