சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகளை ( Guidelines ) நீலகிரி ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ளார்.
சர்வதேச சுற்றுலா தளமாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கோடை வெயிலின் அதிகமாக இருப்பதாலும் மற்றும் பள்ளி விடுமுறைகள் என்பதாலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், அதிகளவில் வாகனங்கள் சுற்றுலா பயணிகள் வருவதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் உள்ளூர் மக்கள் கூட வாகனங்கள் செல்ல முடியாமல் திணரும் நிலை உருவாகி உள்ளது.
இதனால் இ – பாஸ் முறையை நடைமுறைபடுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த இ-பாஸ் முறை மே 7-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதி வரை நடைமுறை படுத்தப்படுகிறது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகளை நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும்.
ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் மட்டுமே போதுமானது.
இந்த நடைமுறை மே 7 முதல் மே 30 வரை சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.
அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு ( Guidelines ) செய்தும், உள்நாட்டு மக்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்தும் இபாஸ் பெற்றுக் கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்