உத்தரப் பிரதேசத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 9 விமான நிலையங்கள் கட்டப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கேள்வி நேரத்தின் போது பேசிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா , பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மோடி அரசின் 9 ஆண்டுகளில் 75 விமான நிலையங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.ஆனால் சுதந்திரம் அடைந்த 65 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் மட்டுமே கட்டப்பட்டன என்று மத்திய அமைச்சர் குற்றம்சாட்டினார்
தொடர்ந்து பேசிய அவர், மோடி அரசாங்கத்தின் கீழ் கடந்த ஒன்பது ஆண்டுகளில், விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் நீர்நிலைகள் உட்பட 75 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 149 ஆக உள்ளது.
குறிப்பாக உத்தரபிரதேசத்தில் முதல் 65 ஆண்டுகளில் 6 விமான நிலையங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. கடந்த ஒன்பது ஆண்டுகளில், மாநிலத்தில் மூன்று கூடுதல் விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து “உத்திரபிரதேசத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் ஒன்பது விமான நிலையங்களை நாங்கள் கட்டுவோம்,” என்று என்றுஅமைச்சர் சிந்தியா தெரிவித்துள்ளது.