மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் குறித்து தப்புக்கணக்கு போடுவதாக (nirmala and mkstlain) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸுடன் கூட்டணி போட்டு திமுக ஏமாற்றுவதாகக் கூறினார். மேலும் தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதாகக் கூறியவர், மத்திய அரசு அளித்த 5ஆயிரம் கோடிக்கு கணக்கு காட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
Also Read :https://itamiltv.com/teacher-arrested-for-sexual-assault/
இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளிப்பது போல மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
நீங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி கொடுக்க முடியாது என்று ஆணவமாகப் பேசும் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களே…
தமிழ்நாட்டைப் பார்த்தால் எப்படி தெரிகிறது?
5000 கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்கிறீர்களே…
நாங்கள் கடனாக வாங்கிய தொகை என்ன ஒன்றிய அரசில் இருந்து நீங்கள் கொடுத்ததா?
NDRF-லிருந்து தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப் பணம் இருக்க, உங்களுக்கு மனம் வராதது ஏன்?
ஆணவம் வேண்டாம்; தப்புக்கணக்கு போடுகிறீர்கள். (nirmala and mkstlain) நாள் கணக்குதான் இனி…
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.