வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜோங் இல்லின் நினைவு தினத்தை முன்னிட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவை ஆட்சி செய்த அதிபர் கிம் ஜோங் இல் 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் திகதி உயிரிழந்தார். இதனை அடுத்து அதிபர் கிம் ஜோங் இல்லின் மகன் கிம் ஜாங் உன் மூன்றாவது தலை முறையாக வடகொரியாவை தற்போது ஆட்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜோங் இல்லின் 10-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.
இதனையொட்டி நாட்டு மக்கள் 10 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது, போன்ற கட்டுப்பாடுகள் தென் கொரிய அரசு விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.