ஓமலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் கழிவறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில்(government hospital) நீண்ட காலமாக ஆண்கள் பிரிவிற்கு எனத் தனி கட்டிடம் இல்லாமல் இடிந்து விழும் நிலையில் இருக்கும் ஓட்டுக் கட்டிடத்தில் சிகிச்சை பார்க்கப்பட்டு வருகிறது.
அந்த கட்டிடத்தில் நோயாளிகள் முறையான வசதி இல்லாமல் கழிவறை அருகிலும் மருத்துவமனை தரையிலும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் பல்வேறு நோய் தோற்று ஏற்படுவதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மருத்துவமனையின் 2ஆம் தளம் சுமார் 100 பேர் சிகிச்சை மேற்கொள்ள வசதியாக இருக்கும் நிலையில் மருத்துவ அலுவலர் ஒருவர் அந்த அறையைப் பயன் படுத்தி வருகிறார் அவருக்கென தனி அரை இருந்தும் அந்த பகுதியைப் பயன்படுத்துவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு 2 ஆம் தளத்தை ஆண்கள் பிரிவு பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.