அம்பத்தூரில் தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டி மன விரக்தியால் தீக்குளிப்பு

old woman committed suicide byfire

சென்னை, அம்பத்தூரில் மூதாட்டி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் பானு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்மேரி 72 வயதான இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் ரோஸ்மேரி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூட்டு வலி ஏற்பட்டதை அடுத்து அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இதனை தொடர்ந்து வீட்டில் இருந்து ஓய்வெடுத்து வந்த இவருக்கு, மகன்கள் நாள்தோறும் மூன்று வேளையும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளனர்.

old-woman-committed-suicide-by-fire
old woman committed suicide byfire

இந்த நிலையில், ரோஸ்மேரி தனது மகளிடம், நான் எல்லோருக்கும் சுமையாக இருக்கிறேன் என கடந்த சில நாட்களாக கூறி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் ரோஸ்மேரி தனது வீட்டுக் கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டு மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார்.

இவரது வீட்டு ஜன்னல் வழியாக புகை வருவதை கண்ட பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் ரோஸ்மேரியின் உறவினருக்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து வந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ரோஸ்மேரி உடல் கருகி இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அம்பத்தூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts