பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளது.
கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
உலக நாடுகளில் கொரோனா தாக்கம் சற்று குறைவடைந்து வரும் நிலையில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் பல நாடுகளில் அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து விமானத்தில் தமிழகம் வருபவர்களுக்கும் இ-பதிவு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலிருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவரும், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள், அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர். சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில விமான பயணிகள் வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளை அறிவுரை அளிக்கப்படுகிறது.