கூட்டுறவுத்துறையின் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் வெங்காயம் கிலோ ஒன்றிற்கு ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை உயர்ந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில்,தமிழ்நாட்டில் தற்போது வெங்காய விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது.
இந்த இந்த நிலையில் வெங்காயம் விலை அதிகரித்து வரும் நிலையில், பண்ணை பசுமை கடைகளில் ரூ.30-க்கு வெங்காயம் விற்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் கே.ஆர்.பெரியர்கருப்பான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்..
“கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்து வருகிறது. பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயத்தினை விற்பனை செய்திட தமிழ்நாடு அரசு வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் இருக்க கூட்டுறவுத்துறையின் மூலமாக முதற்கட்டமாக சென்னையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 4 நடமாடும் விற்பனை வாகனங்கள் 6T 60T 14 மையங்கள் மூலம் இன்று முதல் (05.11.2023) வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
தற்பொழுது உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூட்டுறவுத்துறையின் மூலமாக பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் கிலோ ஒன்றிற்கு ரூ.30/- வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தேவைக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை பிற பகுதிகளிலும் எடுக்கப்படும். குறுகிய காலத்திற்குள் வெங்காயம் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.