ஆன்லைன் விளையாட்டால் கடன் சுமை ஏறிய நிலையில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்ட்ராய்டு போன் எப்போ வந்ததோ அப்போதே பல தீமைகளும் இலவசமாக வந்து சேர்ந்துள்ளது . ஆண்ட்ராய்டு போன் எத்தனையோ நல்ல வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் நிலையில் அதே ஆண்ட்ராய்டு போன்களின் மூலம் பல தீய செயல்களும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன .
அந்தவகையில் இந்த ஆன்லைன் விளையாட்டின் மூலம் தமிழகத்தில் மட்டுமே ஏராளமான நபர்கள் தங்களது உயிரை மாய்த்து வருகின்றனர் .
Also Read : கனிமவளக் கொள்ளை திமுக நிறைவேற்றிய ஒரே வாக்குறுதி – அண்ணாமலை சாடல்..!!
இந்நிலையில் சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த வழக்கறிஞரான சதீஷ் என்பவர் தனது மனைவிக்கு வீடியோ கால் செய்து, ‘நீ நலமாக வாழ்’ எனக் கூறிவிட்டு தற்கொலை =செய்துகொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சதீஷின் இந்த தற்கொலைக்கு காரணம் என்னவாக இருக்கும் என சற்று உற்று பார்த்தபோது ஆன்லைனில் கேம் விளையாடி ₹14 லட்சம் வரை கடன் ஏற்பட்டதால், தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளதாகவும் இதன்காரணமாகவே மனமுடைந்த சதீஷ் தற்கொலை செய்துகொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .