செங்கல்பட்டில் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய இளைஞர் அதிக அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு அடுத்த அனுமந்த புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் வயது (27) இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது ஆறு மாத கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில் யுவராஜ் செங்கல்பட்டு பகுதியில் உள்ள இருசக்கர வாகன சர்வீஸ் சென்டரில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
Also Read : ஈபிஎஸ் முதலமைச்சரானது நாம் பார்த்ததுதான் – உதயநிதி ஸ்டாலின்..!!
வேலை இல்லாமல் இருந்த போது பண தேவைக்காக ஆன்லைன் செயலி மூலம் யுவராஜ் கடன் பெற்றுள்ளார் இதையடுத்து கடனை திருப்பி கட்ட கூறி யுவராஜுக்கு ஆன்லைன் செயலி மூலம் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதிக அழுத்தம் காரணமாக மன உளைச்சலில் இருந்த யுவராஜ் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் யுவராஜின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
ஆன்லைன் செயலி மூலம் கடன் கடன் பெற்று அதிக அழுத்தம் காரணமாக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.