ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 300 வீரர்கள் மற்றும் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15-ஆம் தேதி பாலமேடு, 16-ஆம் தேதி அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான முன் ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்றும் இது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என்றும் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 300 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 300 வீரர்களுக்கும் , 150 பார்வையாளர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் பங்கேற்கும் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தெரிபித்துள்ளது. மேலும் வீரர்கள் அனைவரும் நெகட்டிவ் சான்றுதழை சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.