தமிழ்நாட்டின் பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா தளங்களில் ஒன்றான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கோடை காலத்தை முன்னிட்டு
அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர்.
அதிகளவிலான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருவதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக பல புகார்கள் எழுந்திருந்தது.
இதன்காரணமாக அங்கு இ – பாஸ் முறையை நடைமுறைபடுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் தற்போது சுற்றுலா வாகனங்களுக்கு மேலும் சில கட்டுப்பாடுகக்ள் விதிக்கப்பட்டுள்ளது.
Also Read : விடாமல் துரத்திய கடன் – சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை..!!
உதகைக்கு வார நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8,000 சுற்றுலா வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும்.
கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் அனுமதி
அரசு பேருந்து, ரயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை
உள்ளூர், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை
கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும்; ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மின்சார வாகனங்களுக்கு இ – பாஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும்
உதகை, கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இருந்து மினி மின்சார பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.