ஊட்டி (ooty) மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து மதியம் 2 மணி அளவில் மேட்டுப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய ரயில் குன்னூர் அருகே வந்தடைந்ததும் மீண்டும் மூன்று முப்பது மணி அளவில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல இருந்தது.
இந்த நிலையில், ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குன்னூர் ரயில் நிலையத்திலிருந்து மொத்தம் 124 பயணிகளுடன் மேட்டுப்பாளையம் நோக்கி ரயில் புறப்பட்டபோது ரயில் நிலையத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் ரயிலின் கடைசி பெட்டியின் இரு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விபத்துக்குள்ளானது.
மேலும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், ரயிலில் இருந்த பயணிகளை அரசு பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பி வைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடம் புரண்ட ரயிலை பொக்கலைன் உதவியுடன் தடம் புரண்ட ரயில் பெட்டியின் சக்கரங்கள் மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டன.
சில தினங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஷாலிமரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் விபத்துக்குள்ளான நிலையில், அதில் 278 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது ஊட்டி (ooty) மலையில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.