அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்தில் வைத்தா அறுவை சிகிச்சை செய்ய முடியும்?” -வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன்(M. Subramanian) காட்டமாக பதிலளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இன்று கலைஞர் நூற்றாண்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது கோடம்பாக்கம் புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(M. Subramanian) தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் காரணமாக சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.67 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ள) நிலையில், வரும் நாட்களில் உயிரிழப்புகள் மேலும் குறையும்; சுமார் T140 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்தில் வைத்தா அறுவை சிகிச்சை செய்ய முடியும்?” வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமான பதில் அளித்தார்.