இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் என்று கூறிவிட்டு, இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டம்:
ஒரே நாடு ,ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை வரிசையில் அடிப்படையாக கொண்டு பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
22வது இந்திய சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,30 நாட்களுக்கு உள்ளாக பொது மக்களும் ,மத அமைப்புகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் குற்றவியல் மற்றும் தண்டனை சட்டங்களும் பொதுவானவையாக இருப்பதால் உரிமையியல் சட்டங்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதே பொது சிவில் சட்டத்தின் நோக்கமாக உள்ளது.
அதன்படி இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்கள் தங்களுக்கென வெவ்வேறு மதச் சட்டங்களைப் பின்பற்றுகின்றன. அதற்குப் பதிலாக அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் திருமணம், விவாக ரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்டவைகள் தொடர்பாக பல்வேறு சட்டங்களை பின்பற்றிவருகின்றனர்.இந்த சட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சட்ட ஆணையத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நாட்டின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் என்று கூறிவிட்டு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒறே சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.