ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக இரண்டாக பிளவுபட்டு இருக்கும் நிலையில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழாவில் (ADMK inaugural ceremony) சமாதான புறாவை ஓபிஎஸ் பறக்க விட்டார்.
அதிமுகவின் பொன்விழா ஆண்டு (ADMK inaugural ceremony) நிறைவடைந்து, 51-வது ஆண்டு இன்று பிறக்கிறது. இதையொட்டி, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலக கட்டிடம் வண்ண விளக்குகளால் நேற்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டார்.
ஒற்றை தலைமை விவகாரத்தில், அதிமுக இரண்டாக பிளவுபட்டுக் கிடந்தாலும், 51-வது ஆண்டில் இன்று நுழைகிறது. இந்த தொடக்க விழாவையொட்டி, அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகம் கோலாகலம் பூண்டுள்ளது.
இதனையடுத்து, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் தலைமைக்கழகத்துக்கு இன்று காலை வருகை தந்தார்.
இதேபோன்று, சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கு வருகை தந்த ஒ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்தி அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இதில், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, கூண்டில் அடைத்து வைத்திருந்த புறாவை வெளியே எடுத்து ஓ.பன்னீர் செல்வத்திடம் தொண்டர்கள் கொடுத்தனர். பின்னர், அந்த புறாவை ஓபிஎஸ் பறக்கவிட்டார்.
ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக இரண்டாக பிளவுபட்டு இருக்கும் நிலையில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழாவில் சமாதான புறாவை ஓபிஎஸ் பறக்க விட்டடுள்ளார் என்று கூறப்படுகின்றது.