தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது போல் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகி உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 2 நாட்களில் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read : பிரியங்காவின் முதல் உரை நினைவுகொள்ளும் அளவுக்கு சிறந்தது – ராகுல் காந்தி பாராட்டு..!!
இதன்காரணமாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (டிச.17) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது .
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் டிச.18ம் தேதி கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.