கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை உடல் உறுப்புகளை திருடுவதாக கூறி உடுமலைப் பேட்டயை சேர்ந்த பிரவீனா என்ற பெண் காவல் நேற்று கோவை மாநகர ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய பிரவீனா,
தனது தாய்க்கு கடந்த ஏப்ரல் மாதம் காய்ச்சல் இருந்ததால் போத்தனூரில் உள்ள ஃபிம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் அனுமதித்ததகவும், மே மாதம் வரை அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் ஆனால் தந்து தாயின் உடல் நலம் குறித்து எந்த தகவலும் கொடுக்காமல் ஒரு நாளுக்கு ரூ.70 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த மருத்துவ நிர்வாகம் கூறியதாக கூறினார்.
மேலும் கடந்த மே மாதம் 3ம் தேதி தனது தாயை கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரில் உள்ள பண்ணைக்கு அழைத்துச் சென்றதாகவும், இதே போல் சில நோயாளிகளையும் அழைத்துச் சென்றதாகவும் ஆனால் அடுத்த நாள் தனது தாய் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் பாத்திக்கபட்ட பெண் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய பிரவீனா, காரணம் இல்லாமல் தனது தாயை வேறு இடத்திற்கு கொண்டு சென்றதாகவும், உடல் உறுப்புகளை திருடுவதற்காக வேறு இடத்திற்கு கொண்டு சென்றதாக மருத்துவமனையில் உள்ள சிலர் எங்களிடம் ரகசியாமக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கேள்வி கேட்ட தன்னை மிரட்டி செல்போனை உடைத்ததாகவும் பின்னர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தன மீது வழக்கு பதிவு செய்வதாக மிரட்டியதோடு, தன்னிடம் இருந்த ஆதாரங்களை அங்கிருந்த போலீசார் அழித்துவிட்டனர் என்றும் கூறினார்.
பின்னர் மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல் நிலையம் வந்து, தங்களை கொலை செய்வதாக மிரட்டினர் என்றும் கூறியுள்ள அந்த பெண், இதுகுறித்து போலீசாரிடமும், சுகாதாரத்துறையிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் உடல் உறுப்பு திருட்டு நடக்கும் இந்த மருத்துவமனை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.