ஜனவரி 1ம் தேதி முதல் இன்று வரை சுமார் 1800 க்கும் அதிகமான டெல்லி காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சற்று குறைவடைந்திருந்த கொரோனா கொரோனா 3 வது அலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ் ஆன ஒமைக்ரான் வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது.
இதனை தொடர்ந்து கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை மத்திய மாநில அரசுகள் ஊரங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு முறைகளையும் மேற்கொண்டு வருகின்றன.
இருந்த போதிலும் பாதிப்புக்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் , காவல்துறையினர், சாமானியர்கள் என பாரபட்சமின்றி கொரோனா பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது தலைநகர் டெல்லி காவல்துறை கமிஷனர் ராகேஷ் அஸ்தானாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஜனவரி 1ம் தேதி முதல் இன்று வரை சுமார் 1800 க்கும் அதிகமான டெல்லி காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.