தமிழ் சினிமாவில் இருக்கும் பல புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பி.சி. ஸ்ரீராம். திரையுலகில் இருக்கும் முன்னணி இயக்குநர்களின் படங்களில் பணியாற்றியுள்ள இவர் . ‘வா இந்த பக்கம்’ என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக திரையுலகிற்கு அறிமுகமானார் .
இதையடுத்து மௌன ராகம், நாயகன், தேவர்மகன், முகவரி, ஐ, ரெமோ என பல உச்ச நட்சத்திரங்களின் மாஸ் பட்ஜெட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கருப்பு கண்ணாடி மிடுக்கான தோற்றம் எப்போதும் சீரியசாக காணப்படும் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி இயக்குனராகவும் மூன்று படங்களை இயக்கியுள்ளார் என்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை . மீரா, குருதிப்புனல், வானம் வசப்படும் ஆகிய படங்களை தான் பி.சி. ஸ்ரீராம் இயக்கியிருந்தார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி இயக்குநர்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இருக்கும் பி.சி. ஸ்ரீராம் மறைந்த தனது மகளின் புகைப்படத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
பி.சி.ஸ்ரீராமின் இந்த உருக்கமான பதிவு தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அவரின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் அவருக்கு கமெண்டில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர் .
இதோ அந்த உருக்கமான பதிவு..