சர்வதேச அரங்கில் எதிர்ப்பு வலுத்ததால் தான் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் மீது பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் பெரிதும் மதிக்கின்ற இறைத்தூதர் முஹம்மது நபிகள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசியது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக அரசு நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், ஈரான், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. குவைத், ஈரான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இந்திய தூதரகங்களுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க சொல்லி சம்மன் அனுப்பியுள்ளன.
முஹம்மது நபி குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதை கண்டித்து சம்மன் அனுப்பியதோடு மட்டுமல்லாமல், அரபு நாடுகளில் உள்ள கடைகளில் இந்திய தயாரிப்பு பொருட்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகளில் இந்திய தயாரிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இது தொடர்பாக பாஜக பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில்;
“ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் பல்வேறு மதங்கள் தோன்றி, செழிப்பாக வளர்ந்துள்ளன. பாஜக அனைத்து மதத்தையும் மதிக்கிறது. எந்த ஒரு மதத்தையும், அதன் கடவுளரையும் அவமதிப்பதை பாஜக வண்மையாக கண்டிக்கிறது. பிற மதத்தை நிந்தனை செய்யும் எந்த ஒரு சித்தாந்தத்தையும் பாஜக ஊக்குவிக்காது. அத்தகைய நோக்குடன் செயல்படும் நபர்களையும் ஊக்குவிக்காது. இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமையை வழங்கியுள்ளது. இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் நாட்டை அனைவரும் சமமாக வாழும், அனைவரும் சமமான மாண்பைப் பெறும் வளமிக்க நாடாக மாற்ற நாங்கள் முயற்சிக்கிறோம். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு முக்கியம். அப்போது தான் அனைவருமே வளத்தின், வளர்ச்சியின் கனியை சுவைக்க முடியும்” என்று பாஜக தரப்பில் விளக்கமளித்தனர்.
இந்த நிலையில், சர்வதேச அளவில் எதிர்ப்புகள் வலுத்த பிறகு தான் பாஜக நடவடிக்கை எடுத்தது என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர்;
“இந்தியாவில் எழுந்த எதிர்ப்புகளுக்கு பாஜக செவிசாய்க்கவில்லை; சர்வதேச அரங்கில் எதிர்ப்பு எழுந்ததாலேயே நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் மீது பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது; இஸ்லாமிய விரோதக் கருத்தை முதலில் விதைத்தவர்கள் நுபுர் சர்மாவோ, நவீன் ஜிண்டாலோ அல்ல; தங்கள் எஜமானர்களை விட இருவரும் கூடுதல் விஸ்வாசத்தை காட்ட முயன்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.