விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் (thangalaan) திரைப் படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் படி வரும் ஏப்ரல் மாதம் இந்த திரைப்
படம் வெளியாக் உள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப் படம் “தங்கலான்”. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதன் மூலம் முதன் முறையாக பா.ரஞ்சித்துடன் இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தில் நடிகை பார்வதி விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மாளவிகா மோகனன், காட்டு வாசி பெண்ணாக நடித்துள்ளார். மேலும் பார்வதி, பசுபதி உள்ளிட்ட உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
மிரட்டலான கூட்டணியில் உருவாகும் தங்கலான் திரைப்படன் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விக்ரமின் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான படமாக இருக்கும்.
தங்கலான் படத்தின் டீசர் தமிழ் சினிமா ரசிகர்களை பிரமிக்க வைத்தது. திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், படம் வெளியீடு சில காரணங்களால் தள்ளிப்போனது.
சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற திரைப் படங்கள் வெளியானதால், ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%be-the-new-poster-of-suriya-starrer-ganguwa-is-out/
இருப்பினும், அந்த தேதியில் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக தங்கலான் திரைப் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது இந்த படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு ஒரு போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
https://x.com/ITamilTVNews/status/1747199853401436475?s=20
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முழுமையாக முடியாததால், படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப் போனதாக கூறப்படுகிறது.
தங்கலான் (thangalaan) திரைப் படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது நடிகர் விக்ரம் ரசிகர்கள் மத்தியில் உட்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.