Premalatha Vijayakanth-தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்துக்கு காலம் கடந்து பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இரவு போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் சளி,
இருமல் மற்றும் சுவாச பிரச்சினையால் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 30 ஆம் தேதி காலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில்,சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில்,அவரது 30-ம் நாள் நினைவு நிகழ்ச்சி நேற்று அனுசரிக்கப்பட்டது.
குடியரசு தினம் என்பதால் விஜயகாந்த் நினைவிடம் தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அங்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன்,
சண்முகபாண்டியன், தேமுதிக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க :திருமாவை தூக்கிப்பேசிய முதல்வர் ஸ்டாலின்!
இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதிசீனிவாசன் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதையொட்டி, அவரது குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth),‘‘நேற்று முன்தினம் காலையிலேயே மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில்,
விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, காலம் கடந்து, காலன் எடுத்துச் சென்றபிறகு விஜயகாந்துக்கு விருது கிடைத்துள்ளது.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1751156329757180258?s=20
அவர் இருந்த காலத்திலேயே இந்த விருது கிடைத்திருந்தால் அவரை நேசிக்கும் அத்தனை நல்ல உள்ளங்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருப்போம்.
எனினும், இந்த கவுரவமான விருதுக்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த விருதை விஜயகாந்த் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம்’’ என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் , ‘‘விஜயகாந்த் சினிமாவிலும், அரசியலிலும் அளித்த பங்களிப்புக்காக
பொருத்தமான நேரத்தில் பத்ம பூஷண் விருது வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரி விக்கிறோம்.
அவரது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து, வாழ்த்து செய்தியோடு ஆறுதலை தெரிவித்தோம்’’ என்றார்.