துபாயில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஜடேஜாவிற்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் தீபக் ஹூடா களமிறக்கப்பட்டார். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் கே எல் ராகுல் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். பவர்பிளே 5 ஓவருக்குள் இந்த இணை 50 ரன்கள் குவித்தது. 28 ரன்களில் ரோஹித் வெளியேறினார்.
அதன் பின் களமிறங்கிய விராட் கோலி நிதனமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்தினார். அவரோடு ஜோடி சேர்ந்து எந்த வீரர்களும் நிலைத்து ஆடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கபட்ட சூர்யா குமார் 13 ரங்களிலும், ரிஷப் பண்ட் 14 ரன்களிலும், பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
கோலி மட்டும் நிலைத்து நின்று அரைசதம் கடந்தார். இறுதிவரை ஆடிய கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 181 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணிசார்பில் சடாப் கான் 2 விக்கெட்களும் இதர பந்து வீச்சாளர்கள் தலா 1 விக்கெட்களை கைபற்றினர்.
182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பாபர் அஸ்ஸாம் 14 ரங்களிலும், பக்கர் ஜமான் 15 ரங்களிலும் வெளியேறினர் . பிறகு ஜோடி சேர்ந்த ரிஸ்வான் மற்றும் நவாஸ் இந்தியணி பந்து வீச்சை அதிரடியாக எதிர்க்ககொள்ள தொடங்கினார். நவாஸ் 20 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர் என அதிரடியாக 42 ரன்கள் குவித்தார். மறு முனையில் ரிஸ்வானும் தன் பங்கிற்கு 51 பந்துகளில் 71 ரன்கள் அடித்து அணிக்கு வலுசேர்தார்.
இவர்கள் ஆட்டமிழக்க இறுதியில் குஷ்தில் மற்றும் ஆசிப் இணை மீதமுள்ள ரன்களை அடித்து பாகிஸ்தானை வெற்றி பெற செய்தனர். 1 பந்து மீதமுள்ள நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. ரிஸ்வான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட சூப்பர் 4 தொடரில் இந்திய அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.