பாகிஸ்தானில் நிலவும் பதற்றமான சூழலில் அங்கு தற்போது (Pakistan election) தேர்தல் நடைபெற்றது வருகிறது. தற்போதைய நிலவரப்படி அங்கு இம்ரான் கான் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 154 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மிகவும் பதற்றமான நாட்களில் ஒன்றான பாகிஸ்தானில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது . இதில் நேற்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் அந்நாட்டு மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் .
இதற்காக நாடு முழுவதும் 65,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையொட்டி, அசம்பாவிதங்கள் எதுவுமின்றி தேர்தலை நடத்த பாகிஸ்தானில் உள்ள ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மூடப்படுவதாக அந்நாட்டு வெளியுறவு அதிகாரப்பூர்வ அறிவித்தது.
தேர்தலின் போது பதற்றமான சூழல் நிலவி வருவதால் முழு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடனான எல்லைப் பகுதிகள் சரக்கு வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கு மூடப்பட்டது .
இந்நிலையில் நேற்று பதிவான பங்குகளின் படி இம்ரான் கான் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 154 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
(Pakistan election) பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சிகள் தலா 47 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, பரிசுப்பொருள் முறைகேடு, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்ட வழக்கு ஆகியவற்றில் பங்கமாக சிக்கினார்.
இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இம்ரான் கான் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே பரிசுப் பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில்
Also Read :https://itamiltv.com/pocso-complaint-against-physical-education-teacher/
அரசின் ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் அரசியலில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத வண்ணம் இம்ரான் கான் தகுதி இழந்துள்ளார்