20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் முக்கிய சுற்றான சூப்பர் 12 சுற்று போட்டிகள் நாடிபெற்று வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் ( pakistan ) – நெதர்லாந்து ( netherlands )அணிகள் மோதின. சென்ற போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி பெற்றதால், இந்த போட்டியில் பாகிஸ்தான் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் இருந்தது.
டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்கம் முதலே பாகிஸ்தானின் பந்து நெதர்லாந்தை பதம் பார்க்க தொடங்கியது. இதனால் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தன. இறுதியாக 90 ரன்களுக்கு நெதர்லாந்து சுருண்டது. பாகிஸ்தான் அணியின் சடாப் கான் 3 விக்கெட்டும், வாசிம் 2 விக்கெட்டும், மற்ற பவுளர்கள் தலா ஒரு விக்கெட்டை கைபற்றினர்.
91 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்க, தொடக்க வீரர் கேப்டன் ,பாபர் அஸாம் 4 ரன்னில் வெளியேறினார். ஆனால் ரிஸ்வான் – ஜமான் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 13.5 முடிவிலே 4 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் இலக்கை எட்டியது.
அதிகபட்சமாக ரிஸ்வான் 49 ரன்களும், ஜமான் 20 ரன்னும் குவித்தனர். இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த உலககோப்பை தொடரில் அந்த அணி பெரும் முதல் வெற்றியாகும். 3 போட்டியில் 2 தோல்வி ஒரு வெற்றி என மொத்தம் 2 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. மீதம் உள்ள 3 போட்டிகளில் வென்றால் கூட பாகிஸ்தான் அரை இறுதி போட்டிக்குள் செல்வது சந்தேகம் தான்.
மற்ற அணிகளான இந்தியா, தென் ஆப்பிரிக்கா,, பங்களாதேஷ் ஆகிய அணிகளில் ஏதேனும் இரண்டு அணிகள் தொடர் தோல்வியை சந்தித்தால் கூட பாகிஸ்தான் தகுதி பெறுவது கடினம்.