உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்கயிருக்கும் நிலையில் சர்வதேச அணிகள் அதற்கு முன்னதாக t20 போட்டிக்கான சுற்றுப்பயணத்தில் உள்ளனர். இந்தியா வந்துள்ள ஆஸ்ட்ரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட t20 தொடரில் விளையாடவுள்ளது இதே போல் பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட t20 தொடரில் விளையாடவுள்ளது.
கடைசியாக இங்கிலாந்து அணி 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்தது. அதன் பின்பு 17 ஆண்டுகள் கடந்து தற்போது தான் இங்கிலாந்து பகிஸ்தானிற்கு கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியினர் சென்ற வாரம் பாகிஸ்தான் வந்திறங்கினார். அவர்கள் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதி, பயிற்சி மைதானம் ஆகிய இடங்களில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன் எப்போதும் இல்லாத அளவிர்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் நடக்கவுள்ள நிலையில் பாகிஸ்தான் மக்கள், கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் சொந்த மண்ணில் மீண்டும் கிரிக்கெட் திரும்பியதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஆட்டத்திரனை வெளிக்காட்ட காத்திருகின்றனர்.
ஆசிய கோப்பை தொடரில் அணியின் கேப்டன் பாபர் அசாம் மோசமக ஆடினார். தற்போது பாகிஸ்தானில் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு தனது நாட்டு ரசிகர்கள் மத்தியில் தனது ஆபரமான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பாத்துள்ளனர்.
இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக இந்த போட்டியில் பங்கு பெற மாட்டார். அவருக்கு பதில் மொயின் அலி தலைமை வகிப்பார்.இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு கராச்சி மைதானத்தில் தொடங்கவுள்ளது.