அமெரிக்காவிற்கு பல சிறப்பு சலுகைகளை பனாமா அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் 47 ஆவது பிரதமராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுள்ள நிலையில் ஏராளமான அதிகரடி முடிவுகளை டிரம்ப் எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை அவர்கள் நாட்டிற்கே திரும்பி அனுப்பும் முடிவில் டிரம்ப் கையெழுத்திட்டு அவர்களை அவர்கள் நாட்டிற்கே திரும்பி அனுப்பி வைத்துள்ளார்.
Also Read : தமிழகத்தில் காவல் நிலையத்தில் கூட பாதுகாப்பு இல்லை – இபிஎஸ் கண்டனம்..!!
இதுபோன்று பல்வேரு அதிரடி முடிவுகளை டிரம்ப் எடுத்து வரும் நிலையில் தற்போது அமெரிக்காவிற்கு பல சிறப்பு சலுகைகளை பனாமா அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு பனாமா கால்வாய் இலவசம் என்றும் சீனாவுடனான பனாமா கால்வாய் ஒப்பந்தம் மற்றும் ‘Belt and Road Initiative’ திட்டத்தில் இருந்து வெளியேறுவதாகவும் பனாமா அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.