விஸ்வரூபம் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடனக்கலைஞர் பிர்ஜு மகராஜ், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 83.
புகழ்பெற்ற நடனக்கலைஞர்களில் மிக பிரபலமானவர் பண்டிட் பிர்ஜு மகராஜ்.
இவர் நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன், தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். நடிகர் கமலின் விஸ்வரூபம் படத்தின் ‘உன்னைக் காணாது நான்’ பாடலுக்காக தேசிய விருதை பெற்றுள்ளார்.
நேற்று இரவு அவர் தனது டெல்லி வீட்டில் இருந்தபோது, திடீர் உடல் நலக்குறை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது வீட்டார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், அவரின் குடும்பத்தாரும், அவரது ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பிர்ஜு மகராஜுக்கு சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக பிரச்சனை இருந்ததாகவும், அதற்காக அவர் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இவரின் மரணத்துக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.