சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஓபிஎஸ் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் (panruti ramachandran) தலைமையில் இன்று நடைபெற்றது.
அமைப்பு ரீதியாக 76 மாவட்ட செயலாளர்கள் இந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பண்ருட்டி ராமச்சந்திரன் (panruti ramachandran) மாவட்ட செயலாளர் மத்தியில் பேசியது,
ஒற்றுமை என்ற பெயரால் நாடாளுமன்ற தேர்தலின் போது நம்மை தெருவில் விட்டு விடுவார்களோ என்று நிறைய மாவட்ட செயலாளர்கள் நினைக்கிறார்கள்
ஒருமுறை அனுபவித்த கொடுமையை நம்மை விட ஓபிஎஸ் நன்கு அறிவார்.
ஆகவே, எடப்பாடி பழனிச்சாமியுடனும் அவரை சேர்ந்தவர்களுடன் ஒற்றுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
சகோதரி சசிகலாவே சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளோம். அவர் இதுவரை பார்க்க நேரம் தரவில்லை. தந்தால் சந்திப்போம்.
பாஜகவிற்கு நாம் தோழமையாக இருக்கலாம். ஆனால், தொண்டர்களாக இருக்க முடியாது.
அவர்களை (பாஜக) பகைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. அதேபோல, அவர்கள் தயவுக்காக காத்திருக்க கூடிய அவசியமும் நமக்கு இல்லை என்று கூறினார்.