கோலாகலமாக நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடப்பாண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது . இதில் இன்று நடைபெற்ற ஆடுவருக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் தூரம் வீசி நேரடியாக இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றார் .
முதல் வாய்ப்புலேயே சிறப்பாக அபாரமாக ஈட்டி எறிந்து அசத்தியுள்ள நீராஜ் சோப்ரா இந்த முறையும் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : சென்னை – செங்கோட்டை இடையே ரயில் சேவையில் புதிய மாற்றம்..!!
இதேபோல் நடப்பு ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை எதிர்கொண்ட வினேஷ் போகத் 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு கெத்தாக முன்னேறியுள்ளார்.