april 9th political campaign : நாடு முழுவதும் மக்களவை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் தலைமை ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.
7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும், தெலுங்கானாவில் 17 தொகுதிகளிலும்,
ஆந்திராவில் 25 தொகுதிகளிலும், கேரளாவில் 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2-வது கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதியும், 3-ஆம் கட்டமாக மே 7 ஆம் தேதியும், 4-ஆம் கட்டமாக மே 13 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5-ஆம் கட்ட தேர்தல் மே 20 ஆம் தேதியும், 6 மற்றும் 7-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு,
தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் களைக்கட்டி உள்ளது.
கட்சி தலைவர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள், கட்சித் தொண்டர்கள் என அனைவரும் தங்களின் விருப்பமான வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று april 9th political campaign பிரச்சாரத்தில் ஈடுபடும் தலைவர்களின் விவரம் பின்வருமாறு..
இதையும் படிங்க : பிரச்சாரத்தில் கேட்ட சத்தம்.. சட்டென மைக்கை ஆஃப் செய்த டிடிவி! நெகிழ்ச்சி சம்பவம்!
- பிரதமர் நரேந்திரமோடி-சென்னை.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – மதுரை, சிவகங்கை.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – தேனி, திண்டுக்கல்.
- தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – சேலம், கள்ளக்குறிச்சி.
- தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை – சென்னை.
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை -பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை.
- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. – திருச்சி.
- பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. – தர்மபுரி.
- த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. – தூத்துக்குடி.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் – மதுரை.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா – விழுப்புரம்.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் – கடலூர், சிதம்பரம்.
- விசிக தலைவர் திருமாவளவன் – சிதம்பரம்.
- திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி – தென்சென்னை.
- தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் – மயிலாடுதுறை.
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – திருப்பூர், நீலகிரி, கோவை.
- மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி- திருச்சி, பெரம்பலூர்.
இதையும் படிங்க : 9 மக்களவை தொகுதிகளில் I Tamil News நடத்திய Mega Servey | PROMO