l murugan press meet-தமிழகம் முழுவதும் அதிமுக தேர்தல் களத்திலேயே இல்லை என்று மக்கள் கூறுவதாக நீலகிரி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. வேட்பாளர்கள் வீதி வீதியாகவும், வீடு வீடாகவும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி கட்சியினரும் வேட்பாளர்களுக்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். உதகையில் பிரசாரம் மேற்கொண்ட அவர், பிரசாரத்தின் இடையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: 2047-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் -L.Murugan Speech
அப்போது, “சமூக நீதியின் உண்மையான கதாநாயகன் பிரதமர் நரேந்திர மோடிதான்’’ என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் பா.ஜ.க. பிரதான கட்சியாக வளர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க. எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்றும், நீலகிரி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. களத்திலேயே இல்லை என்பது மக்களின் கருத்தாக உள்ளதாகவும் கூறினார்.
பா.ஜ.க. கூட்டணியின் 39 வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.