சென்னையில் 16 இடங்களில் பெண்கள் பாதுகாப்பான முறையில் வாக்களிக்க பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது
நாடு முழுவதும் 202ஆம் ஆண்டிற்கான 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 14) தொடங்கி வரும் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்படி, தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. இந்த 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
அந்த வகையில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் சிரமமின்றியும் கால தாமதமின்றியும் ஒட்டு போடுவதற்கு வசதியாக 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் 944 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 685 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 23 மிகவும் பதற்றமான வாக்குச்சாடிகளும் என 708 வாக்குச்சாவடிகள் இதில் அடங்கும்.
இதையும் படிங்க:ஓட்டுக்கு பணம்; ராமநாதபுரத்தில் நால்வரிடம் போலீசார் விசாரணை
- இந்த நிலையில் சென்னையில் 16 இடங்களில் பெண்கள் பாதுகாப்பான முறையில் வாக்களிக்க பிங்க் நிற பூத் மையம்(பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள்) அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையங்களில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் என அனைவரும் பெண்களே பணியாற்ற உள்ளனர்.
- கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இங்கு பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்தளம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
- இங்கு பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் என அனைவரும் பெண்களே.
- கோடை வெயிலில், பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க சிரமப்படுவார்கள் என்பதால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தாலும், இங்கு அனைவரும் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.