ஒடிசாவில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து..! இதுவரை 233 பேர் உயிரிழப்பு…

ஒடிசாவில் நள்ளிரவில் அடர்ந்த காட்டின் நடுவே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோரில் தடம் புரண்ட சரக்கு ரயில் மீது துரந்தோ மற்றும் கோரமண்டல் விரைவு ரயில்கள் மோதிய விபத்தில் உயிர் சேதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது .பாலசோரில் உள்ள பஹானாகா ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

உள்ளூர் மக்களுடன் சேர்ந்து இந்திய மீட்பு படையினர் காவல்துறையினர் என பலரும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . இந்த ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு பாலசோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். சுமார் 100க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது .

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசர கட்டுப்பாட்டு அறை எண்கள் மற்றும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த விபத்து செய்தியறிந்த மத்திய மாநில அமைச்சர்கள் பலர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , காயமடைந்தோர் எண்ணிக்கை 900ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

கோரமண்டல் ரயிலின் எஞ்சின் மற்றும் 11 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . கோரமண்டல் ரயிலின் A1, A2,H1, B2,B3,B4,B5,B6,B7,B8,B9 ஆகிய பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது .

மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்து என்பதால் உயிர் சேதம் மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் உள்ளூர் மக்கள் பலரும் அப்பாவி உயிர்களை காக்க ரத்தம் கொடுக்க மருத்துவமனைகளுக்கு குவிந்து வருகின்றனர் .

Total
0
Shares
Related Posts