ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் t20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆரோன் பின்ச் தலைமை வகித்து வந்தார். அண்மையில் நடைபெற்ற நியூலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய பிறகு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் அடுத்த கேப்டன் யார் என்ற குழப்பம் வெகு நாட்களாக நிலவி வந்தது.
இந்த கேப்டன் பதவிக்காக ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் ஸ்மித், மேக்ஸ்வெல், கேரி, மார்ஷ் ஆகியோரின் பெயர்கள் ஆஸ்திரேலிய வாரியத்தில் பேசப்பட்டு வந்தது. முன்னாள் கேப்டன் டேவிட் வார்னரும் இந்த பதவிக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் பேசி வந்தார்.
டெஸ்ட் போட்டியில் பந்தை சேதபடுத்திய விவகாரத்தில் வார்னர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கபட்டு அவர் தலைமை பதவி வகிக்க தடை விதிக்கபட்டது. அந்த தடையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் தான் பரிசீலனை செய்து நீக்கியது. இதனால் வார்னர் மீண்டும் கேப்டன் பதவிக்கு வருவது கிட்டதட்ட உறுதிசெய்யப்பட்டது.
ஆனால் நேற்று மாலை வெளியான அறிக்கையில் சர்வதேச ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக பேட் கமின்ஸ் ( pat cummins ) நியமிக்கபட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து அடுத்து நடிக்கவிருக்கும் 2023 ஆண்டின் 50 ஓவர் உலககோப்பை தொடரில் ஆஸ்ட்ரேலிய அணியை பேட் கம்மின்ஸ் தலைமை தாங்குவாறென தெரிவித்துள்ளனர்.
29 வயதாகும் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியின் 27 வது ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆவார், ஏற்கனவே டெஸ்ட் போட்டிக்கும் இவர் தலைமை தாங்கும் நிலையில் தற்போது ஒருநாள் அணியயும் வழி நடத்தவுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வேக பந்து வீச்சாளர் கேப்டன் பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும்.