அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் கொரோனா பிசிஆர் பரிசோதனை முடிவுகளை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என சார்ஜா மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், டெல்டா வகை வைரஸ் என உருமாற்றம் அடைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதனை அடுத்து கொரோனா தொற்று சற்று குறைவடைந்து உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் சில நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட மற்றுமொறு புதிய வகை கொரோனாவன ஒமைக்ரான் வைரஸ் 100 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மீண்டும் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனை அடுத்து உருமாறிய ஒமிக்ரான் மேலும் பரவாமல் தடுப்பதற்காக மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் கொரோனா பிசிஆர் பரிசோதனை முடிவுகளை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என சார்ஜா மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சார்ஜா அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்காக வரும் பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தொற்று இல்லை என்ற பிசிஆர் முடிவுகளை கையில் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கபட்டுள்ளது.
மேலும் 2 டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 14 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் முடிவுகளைவும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் 7 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளைவும் கையில் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.