“வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் இனி தேர்தல் நடத்த வேண்டாம். தேர்தல் விடுமுறையை ( ThamizhisaiSoundararajan ) மக்கள் கொண்டாடி வருவது கவலை அளிப்பதாக தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்
தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது :
தென் சென்னைக்கு உட்பட்ட மயிலாப்பூர் தொகுதியின் 13ஆவது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி பாஜக சார்பில் மனு கொடுத்துளோம்
திமுகவினர் பாஜக முகவர்களை தாக்கி வெளியில் அனுப்பிவிட்டு கள்ள வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளேன் இதுகுறித்து நல்ல ,முடிவு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்துக்கு கோடிக் கணக்கில் செலவு செய்வதை விட, வாக்காளர்கள் அனைவரது பெயரும் பட்டியலில் இருக்கிறதா என்பதை ஆணையம் கண்காணிக்க வேண்டும்; சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவிதம் குறைவது கவலை அளிக்கிறது.
பாஜகவுக்கு ஆதரவான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது; வாக்காளர்கள் தங்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா என்பதை தாங்களே சரிபார்த்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை உரிய பலன் தரவில்லை
என்னை கேட்டால் இனி வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் இனி தேர்தல் (ThamizhisaiSoundararajan) நடத்த வேண்டாம் என்று தான் கூறுவேன் தேர்தல் விடுமுறையை மக்கள் கொண்டாடி வருவது கவலை அளிக்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.