narayanan thiruppathi-தமிழக தேர்தல் வரை சனாதன எதிர்ப்பை ஆதரித்த காங்கிரஸ் தேர்தல் முடிந்தவுடன் சனாதன தர்மத்திற்கு வால் பிடிப்பது கேடுகெட்ட சந்தர்ப்பவாத அரசியல் என்று தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு 2023 செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் நடத்தப்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி ,”கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும்.
அப்படித்தான் இந்த சனாதன தர்மத்தையும் எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும் ” என்று பேசி இருந்தார்.அவரது பேச்சு பாஜக மற்றும் இந்து அமைப்புகளிடையே கடும் சர்ச்சையைக் ஏற்படுத்தியது.
மேலும், மகாராஷ்டிரா, பீகார் , ராஜஸ்தான், உ.பி. மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டுள்ளது.
இந்நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,“தெலங்கானா மாநிலத் தலைவர் மற்றும் முதல்வர் என்ற முறையில் அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த கருத்து தவறு என்று நான் கூறுகிறேன். அதற்கு நிச்சயம் அவர் பொறுப்பேற்க வேண்டும்.
அது அவருடைய சிந்தனையாக இருக்கலாம். ஆனால் சனாதனம் குறித்த கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்திய நாடு.
ஆகவே, மத உணர்வுகளை மதித்து, அதற்கு தீங்குவிளைவிக்காமல் அனைவரின் நம்பிக்கைகளையும் நிலைநிறுத்துவதே முக்கியம்” என்று தெரிவித்து இருந்தார்.தற்பொழுது தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க : சனாதன சர்ச்சைப் பேச்சு : உதயநிதி மீது..உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!
இது குறித்து தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,” “உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” : தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.
தமிழக தேர்தல் வரை சனாதன எதிர்ப்பை ஆதரித்த காங்கிரஸ் தேர்தல் முடிந்தவுடன் சனாதன தர்மத்திற்கு வால் பிடிப்பது கேடுகெட்ட சந்தர்ப்பவாத அரசியல்.
சனாதன தர்மம் குறி்தது அவதூறு பேசிய உதயநிதி ஸ்டாலினை தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ள தெலங்கானா முதலவர் ரேவந்த் ரெட்டி அவர்களே, உண்மையிலேயே அக்கறையிருந்தால், ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தியதற்கு உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிந்து கைது செய்யுங்களேன்!! நீங்கள் செய்வீர்களா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.