இந்திய நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவை வாழ்த்தி சிற்பத்தை உருவாக்கி ஒடிசா மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர் முர்மு (64) எதிர்கட்சியின் யஷ்வந்த் சின்ஹாவுக்கு எதிராக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தார்.
“திரௌபதி முர்மு ஜியின் வாழ்க்கை, அவரது ஆரம்பகால போராட்டங்கள், அவரது வளமான சேவை மற்றும் அவரது முன்மாதிரியான வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது. அவர் நமது குடிமக்களுக்கு, குறிப்பாக ஏழைகள், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நம்பிக்கையின் கதிராக உருவெடுத்துள்ளார்,”
இந்த நிலையில் ,ஓடிசா மாநிலம் பூரி கடற்கரையில் 15வது புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவிற்கு வாழ்த்து தெரிவித்து அவரது மணல் சிற்பத்தை பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்துள்ளார்.
தனக்கே உரிய தனித்தன்மையுடன் அவர் உருவாக்கியுள்ள இந்த மணல் சிற்பத்தை அங்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கண்டுகளித்த வண்ணம் உள்ளனர்.