தமிழ்நாடு முழுவதும் 6,000 பட்டாசுக் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
ஒவ்வவாறு ஆண்டும் அனைத்துத் தரப்பு பொதுமக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகைக்கு, இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில், பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் அரசு வெளியிட்டுள்ள தளத்தில் விண்ணப்பிக்கவேண்டும் என தெளிவாக கூறப்பட்டு விதிமுறைகளும் வழிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளது .
அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் 6,000 பட்டாசுக் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 685 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை தீவு திடல், நந்தனம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.