பஞ்சாப் மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் காதலியால் இளைஞர் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் குறித்த செய்தி தொகுப்பை காணலாம்.
இந்தியாவில் விவசாயத்திற்கு பெயர்போன மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப் மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலியை திருமணம் செய்வதற்காக காதலன் தீபக் காதலிக்கு துபாயில் இருந்து 50,000 பணம் அனுப்பியுள்ளார் .
காதலியை திருமணம் செய்ய போகிறோம் என்ற மகிழ்ச்சியில் துபாயில் இருந்து திருமணத்தன்று காதலி கூறிய முகவரிக்கு தீபக் சென்றபோது அப்படி ஒரு இடமே இல்லாததால் காதலன் மனமுடைந்து போயுள்ளார்.
இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் காதலித்தும், ஒருமுறை கூட நேரில் சந்திக்கவில்லை. இந்நிலையில் காதலியால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வேதனையில் தத்தளித்த தீபக் பின் போலீசில் இதுகுறித்து புகாரளித்துள்ளார்.
இதையடுத்து தீபக்கின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் காதலியை பிடிக்க முயன்று வருகின்றனர் . இன்றைய 2கே காலக்கட்டத்தில் இளசுகள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடப்பதை முழு நேர வேலையாக செய்து வரும் நிலையில் இதுபோன்ற ஆன்லைன் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் சொந்த பணத்தில் சூனியமும் வைத்துக்கொள்கின்றனர்.