சென்னையில் பூங்கா அருகே விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய ( Pet dogs ) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் பூங்கா அருகே 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது அங்கு இருந்த புகழேந்தி என்பவரின் வளர்ப்பு நாய் அந்த 5 வயது சிறுமியை நோக்கி வேகமாக ஓடி வந்து கடித்து குத்தறியுள்ளது .
Also Read : அரசு கலைக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!
நாய்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் .
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே வெயிலின் தாக்கத்தால் சென்னையில் உள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் தாக்கப்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.