தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்(udayanidhi )சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பீகார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில்சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி டெங்கு ,கொரனோ ,மலேரியா இதை எல்லாம் நாம் எதிர்க்க கூடாது அதனை ஒழித்து கட்ட வேண்டும். அப்படி தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்க்க கூடாது அதனை ஒழுத்து கட்டவேண்டும் என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில்,திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது என்றும், அதை கொரோனா, மலேரியா, காய்ச்சலுக்கு ஒப்பிட்டு பேசியதற்கு பாஜகவினர் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பீகார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா, தலைமை நீதிபதி பங்கஜ் குமார் லால் அமர்வு முன் நீதிமன்றத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி மனு தாக்கல் செய்தார்.
மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனு மீதான வழக்கு விசராணை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.