Ukraine President Volodymyr Zelenskyy : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொல்ல சதித் திட்டம் தீட்டிய குற்றத்திற்காக போலந்து நாட்டை சேர்ந்த பவெல் கே என்ற நபரை போலந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
உக்ரைன் எல்லையை ஒட்டி, தென்கிழக்கு போலந்தில் அமைந்துள்ள ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையம் அமெரிக்கப் படையினரின் பாதுகாப்பில் உள்ளது.
இந்த விமான நிலையம் வழியாகத்தான் உக்ரைனுக்குச் சர்வதேச ஆயுதங்கள் மற்றும் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன.
மேலும் உலகின் மற்ற நாடுகளுக்குச் செல்ல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உட்பட பல தலைவர்கள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு ரகசியங்கள் திருடப்பட்டுள்ளன எனவும் இவை ரஷிய உளவு அமைப்பினருக்குக் கொடுக்க இருப்பதாக வந்த தகவல் வெளியானது Ukraine President Volodymyr Zelenskyy.
உளவு துறையின் தகவலின் படி போலந்து நாட்டைச் சேர்ந்த பவெல் கே என்பவர் தான் இதைச் செய்துள்ளார் என்பது உறுதி ஆனது.
அதன் பெயரில், போலந்து அதிகாரிகள் பவெல் கே இருக்கும் இடத்தை ட்ராக் செய்து, அவரை கைது செய்தனர்.
மேலும் அவருக்குச் சொந்தமான பொருட்களைச் சோதனையிட்ட போது ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு ரகசியங்கள் இருந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது..
இதையும் படிங்க : “அடுத்த 24 மணி நேரத்தில் …” – பயங்கர எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!